வங்கிகள் இணைப்புக்கு எதிராக தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் பேட்டி


வங்கிகள் இணைப்புக்கு எதிராக தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 20 Jan 2019 11:00 PM GMT (Updated: 20 Jan 2019 2:45 PM GMT)

திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் 2–வது மாநாடு நேற்று திருப்பூர் ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் நடைபெற்றது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் 2–வது மாநாட்டில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் கார்த்திகேயன், தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் அருணாசலம் உள்பட வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாநாடு குறித்து பொதுச்செயலாளர் அருணாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் தேனா வங்கி, விஜயா வங்கியை இணைத்து வருகிற ஏப்ரல் மாதம் 1–ந் தேதி முதல் செயல்பட உள்ளது.

அவ்வாறு இணைக்கும்போது தேனா வங்கி, விஜயா வங்கியின் ஆயிரக்கணக்கான கிளைகள் மூடப்படும். வங்கி ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். இதற்கு எதிராக ஏற்கனவே நடத்தப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் 10 லட்சம் பேர் பங்கேற்றார்கள். வங்கிகள் இணைப்புக்கு எதிராக தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 9 தொழிற்சங்கங்கள் இணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் விரைவில் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story