ராயபுரத்தில் ஓடும் பஸ்சில் செல்போன் திருடிய 3 பேர் கைது
மாநகர பஸ்களில் தொடர்ந்து செல்போன்கள் திருட்டுப்போவதாக போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் புகார் கொடுத்தனர். ராயபுரம் போலீசார் தனிப்படை அமைத்து செல்போன் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
திருவொற்றியூர்,
சென்னை ராயபுரம், காசிமேடு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாநகர பஸ்களில் தொடர்ந்து செல்போன்கள் திருட்டுப்போவதாக போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன் உத்தரவின்பேரில் ராயபுரம் போலீசார் தனிப்படை அமைத்து செல்போன் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் காசிமேடு பகுதியைச் சேர்ந்த அஜீஷ்(வயது 22) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின்பேரில் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மணிகண்டன்(25), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சரவணன்(24) ஆகியோரையும் பிடித்து விசாரித்தனர்.
அதில் இவர்கள் 3 பேரும் சேர்ந்து ராயபுரம், காசிமேடு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஓடும் பஸ்களில் பெண்கள் உள்பட பயணிகளிடம் செல்போன்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story