நெல்லையில் பூரண கும்ப மரியாதையுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்


நெல்லையில் பூரண கும்ப மரியாதையுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்
x
தினத்தந்தி 20 Jan 2019 11:00 PM GMT (Updated: 20 Jan 2019 5:40 PM GMT)

நெல்லைக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டு பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நெல்லை, 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருச்சி, மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, பிற்பகலில் நெல்லைக்கு வந்தார். அவர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்ற மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழாவில் கலந்து கொண்டார்.

இதையொட்டி அந்த மண்டபம் முன்பு எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரிடம் நெல்லையப்பர் கோவில் அர்ச்சகர்கள் பூரண கும்பத்தை கொடுத்து வரவேற்பு அளித்தனர். மேலும் அமைச்சர் ராஜலட்சுமி, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., இன்பதுரை எம்.எல்.ஏ., புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர். மேலும் ஏராளமான தொண்டர்களும் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிசாமியை வரவேற்றார்.

மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு செண்டை மேளம், நாதசுவரம், மேளதாளம் முழங்கவும், விண்ணதிர பட்டாசுகள் வெடித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் வருகையையொட்டி மண்டபத்தில் வெளிப்புற நுழைவு வாசல் மற்றும் உள் நுழைவு வாசல் பகுதியில் வாழை மரங்களால் அலங்கரித்து வரவேற்பு தோரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

மேலும் எடப்பாடி பழனிசாமி வந்து சென்ற கே.டி.சி.நகர் பாலம் பகுதி, தூத்துக்குடி 4 வழிச்சாலை, திருச்செந்தூர் ரோடு, சமாதானபுரம், மார்க்கெட், முருகன்குறிச்சி, வண்ணார்பேட்டை, அரசினர் சுற்றுலா மாளிகை, கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம், சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், ஸ்ரீபுரம், டவுன் ஆர்ச், ரதவீதிகள் பகுதிகளில் அ.தி.மு.க. கொடிகளும், பேனர்களும் கட்டப்பட்டு இருந்தன. ஆங்காங்கே மிகப்பெரிய அலங்கார வளைவும் அமைக்கப்பட்டு இருந்தன.

முதல்-அமைச்சரின் வரவேற்பு நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சுதா கே.பரமசிவன், எம்.பி.க்கள் முத்துகருப்பன், விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், செல்வமோகன்தாஸ் பாண்டியன், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள், நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இ.நடராஜன், மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாநகர் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் மகபூப்ஜான், நெல்லை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் பல்லிக்கோட்டை ஏ.செல்லத்துரை, புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல்முருகன், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, புதுக்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன், நெல்லை புறநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன்.

நெல்லை புறநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் காபிரியேல் ஜெபராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், முன்னாள் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஜோதிராஜ், நெல்லை புறநகர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அவைத்தலைவர் காபிரியேல் தேவஇரக்கம், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் ஜாண் கென்னடி, களக்காடு நகர செயலாளர் களந்தை செல்வராஜ், தென்காசி நகர அ.தி.மு.க. செயலாளர் சுடலை, நாங்குநேரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், அவைத்தலைவர் தளவை சுந்தர்ராஜ், கண்டிகைப்பேரி கிளை செயலாளர் ஜாண்சன், வடக்கு விஜயநாராயணம் கிளை செயலாளர் ராஜா, ஊராட்சி கழக செயலாளர் ஏசுராஜன், முன்னாள் கவுன்சிலர் சிவபெருமாள் என்ற சிவா, சிங்கநேரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன்,

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி முன்னாள் இணை செயலாளர் பாலசுப்பிரமணியன், ஆழ்வார்திருநகரி நகர செயலாளர் செந்தில்ராஜகுமார், புறநகர் மாவட்ட வக்கீல் பிரிவு துணை செயலாளர் பழனிக்குமார், சரவணக்குமார், தொழிலதிபர் ராதாகிருஷ்ணன், ஆறுமுகநேரி பேரூராட்சி கழக செயலாளர் அரசகுரு, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் பெரியபெருமாள், நெல்லை- தூத்துக்குடி மாவட்ட பனைபொருள் கூட்டுறவு சம்மேளன துணைத்தலைவர் ஜெபராஜ், திருவிருத்தான்புள்ளி ஊராட்சி கழக செயலாளர் சாமுவேல், முன்னாள் பேரூர் கழக செயலாளர் லாரன்ஸ், களக்காடு ஒன்றிய முன்னாள் எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், களக்காடு பேரூர் கழக செயலாளர் செல்வராஜ், முன்னாள் நாங்குநேரி ஒன்றிய கழக செயலாளர் சூர்யகுமார், நாங்குநேரி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோக்குமார், மகளிரணி செயலாளர் சுஜாதா ராஜம், வெங்கட்ராயபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அந்தோணிராஜ், இட்டமொழி கூட்டுறவு சங்க தலைவர் சிங்கராஜ், மூலைக்கரைப்பட்டி முத்துராமலிங்கம், சேரன்மாதேவி ஒன்றிய துணை செயலாளர் கணபதி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் முத்தையா, ஒப்பந்ததாரர் முத்துக்குட்டி, புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பழனிக்குமார், அரசு வக்கீல்கள் சிவலிங்கமுத்து, ராஜேஷ்வரன், வக்கீல்கள் தேவசகாயம், கோதண்டராமன், மோகன்ராஜ், வள்ளிநாயகம், வெங்கடேஷ், சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி நெல்லை மாநகரில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் வந்து சென்ற பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிசாமி வந்து சென்ற பாதைகளில் குறிப்பிட்ட நேரம் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. 

Next Story