கன்னியாகுமரி அருகே 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி அருகே 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பெண்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி,
சுசீந்திரம் கொத்தையடி தெருவை சேர்ந்தவர் சிவகுமார்(வயது 23). இவரும், கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
நண்பர் குடும்பத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் உள்ளார். அவரது தயார், சிறுமி சிறுவயதாக இருக்கும்போதே குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதனால், சித்தியின் பராமரிப்பில் சிறுமி இருந்து வந்தார்.
நண்பர்கள் குடும்பம் என்பதால் சிவகுமார், சிறுமி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது, சிறுமியுடன் நெருங்கி பழகினார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த சிறுமியை சிவகுமார் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமியிடம் கூறிவிட்டு தப்பிச் சென்றார்.
போக்சோ சட்டத்தில் வழக்கு
இதுபற்றி சிறுமி கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சிவகுமாரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியுடன் நெருங்கி பழக சிவகுமாரின் தயார் அனிதாவும், சிறுமியின் சித்தியும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து அனிதா உள்பட 2 பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story