நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி திருவாரூரில், சுகாதாரத்துறை ஒப்பந்த தொழிலாளர்களிடம் ரூ.62 லட்சம் மோசடி


நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி திருவாரூரில், சுகாதாரத்துறை ஒப்பந்த தொழிலாளர்களிடம் ரூ.62 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 21 Jan 2019 10:15 PM GMT (Updated: 21 Jan 2019 6:48 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில், சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.62 லட்சம் மோசடி செய்த அரசு ஊழியர்்கள் 8 பேர் உள்பட 11 பேர்் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர்் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவுட்சோர்சிங் மூலம் பணியாற்றி வருகின்ற ஒப்பந்த தொழிலாளர்்கள் 41 பேர், திருவாரூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்் ஸ்டான்லி மைக்கேலிடம் ஒரு புகார்் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில், சுகாதாரத்துறையில் தங்களுக்கு நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி சிலர் பண மோசடி செய்ததாக அதில் கூறியிருந்தனர்.

இந்த புகாரின் பேரில் இணை இயக்குனர் துறை ரீதியாக விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில், நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்் ஸ்டான்லி மைக்கேல், திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி புகார் ஒன்றை அளித்தார்.

அதில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்்த்த செல்வராஜ், சுகாதார ஆய்வாளர்கள் உதயகுமார்், பாலன், மருந்தாளுனர்்கள் அப்துல் முகமது பாரி, அரவிந்தராஜ், துணை இயக்குனர்் அலுவலக கண்காணிப்பாளர்் முருகராஜ், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்் ரவிச்சந்திரன், ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை ஊழியர் பன்னீர்் செல்வம், ஆசிரியர் பாண்டுரங்கன் மற்றும் மணி, வீரசேகரன் உள்்பட 11 பேரும் சேர்்ந்து சுகாதார துறையில் அவுட்சோர்்சிங் முறையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்்களிடம் நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.61 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரை மோசடி செய்திருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்த புகாரின் பேரில் திருவாரூர்் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்் 11 பேர்் மீதும் கூட்டுச்சதி, நம்பிக்கை மோசடி, பண மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளனர்்.

நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி சுகாதாரத்துறை ஒப்பந்த தொழிலாளர்களிடம் ரூ.62 லட்சம் மோசடி செய்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story