ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததால், காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு உள்ளது அமைச்சர் பேச்சு + "||" + Stalin declares Rahul Gandhi as prime ministerial candidate, splits in Congress coalition
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததால், காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு உள்ளது அமைச்சர் பேச்சு
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததால், காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூரில், அ.தி.மு.க. சார்்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர செயலாளர்் மூர்்த்தி தலைமையில் நடந்தது. மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் சேகர், நிர்வாகிகள் பாலாஜி, ரயில் பாஸ்கர், நகர அவைத்தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ்தில் கலை இலக்கிய அணி செயலாளர் வைகை செல்வன், கட்சியின் தலைமை பேச்சாளர் ருத்ரதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான காமராஜ் பேசியதாவது:-
மக்களின் நலனுக்காக, ஊழலை எதிர்்த்து உருவான இயக்கம் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடைய வழியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி்சாமி தலைமையில் நல்ல ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சியின் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையே பார்த்து பயந்து போன தி.மு.க., ஆளும் அ.தி.மு.க.வை பற்றி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகிறது. ஊழலுக்கான நடவடிக்கைக்காக கலைக்கப்பட்ட இயக்கம் தி.மு.க..
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இடத்திற்கு தகுந்தார்் போல் மாற்றி, மாற்றி பேசுகிறார். சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தார். மேற்குவங்கத்தில் நடந்த கூட்டத்தில் மம்தாபானர்ஜியை புகழ்ந்து பேசுகிறார்். இப்படி ஊருக்கு ஒன்று என்று ஸ்டாலின் மாற்றி, மாற்றி பேசுகிறார். ராகுல் காந்தியை என்றைக்கு பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் அறிவித்தாரோ, அன்றைக்கே காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு விட்டது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், முதல்-அமைச்சர் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய கனவு நிறைவேறாது. மக்களால் பாராட்டப்படுகிற ஆட்சி நடத்துகிறார் என்பதற்காகவே எடப்பாடி மீது ஸ்டாலின் கொலைப் பழி சுமத்துகிறார். தி.மு.க. திட்டமிட்டு இந்த செயலை அரங்கேற்றி வருகிறது.
ஒரு கொள்ளை கூட்டத்தின் தலைவன் கூறிய கருத்தை ஒரு கட்சியினுடைய தலைவர் வழிமொழிகிறார் என்பது வேதனையான ஒன்று. கொள்ளையடித்த சயன் உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தி.மு.க. வக்கீல்கள் வாதாடுகிறார்கள். தி.மு.க. நிர்வாகிகள் ஜாமீன் கையொப்பமிடுகிறார்கள். இதிலிருந்து அ.தி.மு.க. மீது திட்டமிட்டு தி.மு.க. பழி போடுகிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
ஸ்டாலின் மற்றும் தினகரன் ஆகியோர் சேர்ந்துகொண்டு இந்த ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டார்கள். அவர்களுடைய கூட்டு சதி பலிக்கவில்லை என்பதனால் இப்பொழுது இருவரும் சண்டையிட்டுக் கொள்வது போல் நாடகமாடுகிறார்கள். இவர்களது நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
திருவாரூர் தொகுதி இடைத்தோதல் எப்போது நடந்தாலும் அ.தி.மு.க. தான் வெல்லும். இதேபோல் நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வாசுகிராமன், மாவட்ட மாணவரணி செயலாளர் விஜயராகவன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முகமது அஸரப், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர்் கலியபெருமாள், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருவாரூர் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் வரவேற்றார் முடிவில் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.