காரிமங்கலம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து நோயாளி உள்பட 5 பேர் படுகாயம்


காரிமங்கலம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து நோயாளி உள்பட 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 22 Jan 2019 4:30 AM IST (Updated: 22 Jan 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் நோயாளி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

காரிமங்கலம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மூக்சாகரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது30). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று அதிகாலை முனிராஜியின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர்.

இந்த ஆன்புலன்சில் முனிராஜ் மற்றும் அவருடைய உறவினர்கள் நாராயணம்மாள்(32), திம்மக்கா(40) மற்றும ஆம்புலன்ஸ் உதவியாளர் ரஞ்சனி(25) ஆகியோர் இருந்தனர். ஆம்புலன்சை தர்மபுரி அன்னசாகரத்தை சேர்ந்த டிரைவர் முனியப்பன்(38) ஓட்டி சென்றார். காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டி மேம்பாலத்தில் சென்றபோது முன்னாள் சென்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியது. இதில் முனிராஜ், ஆம்புலன்ஸ் டிரைவர் முனியப்பன், உதவியாளர் ரஞ்சனி ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 5 பேரையும் மீட்டு மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தில் ஆம்புலன்சின் முன் பகுதி நொறுங்கியது.

இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நோயாளியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story