மாவட்ட செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவு 415 காசுகளாக நிர்ணயம் + "||" + The price of egg in the Namakkal zone is 10 coins decline and 415 coins fixing

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவு 415 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவு 415 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவடைந்து 415 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 425 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். இதன்படி முட்டை கொள்முதல் விலை 415 காசுகளாக சரிவடைந்து உள்ளது.


பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு:- சென்னை-440, ஐதராபாத்-398, விஜயவாடா, தனுகு-425, பார்வாலா-400, மும்பை-460, மைசூரு-435, பெங்களூரு-425, கொல்கத்தா-472, டெல்லி-435.

முட்டைக்கோழி கிலோ ரூ.69-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.67-ஆக சரிவடைந்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.83-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தையொட்டி தமிழகத்தில் முட்டை தேவை பொதுமக்கள் இடையே வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவில் முட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளன. எனவே முட்டை விற்பனையை அதிகரிக்க அதன் கொள்முதல் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. வெட்டன்விடுதி சந்தையில் வெள்ளாடுகள் விலை கிடுகிடு உயர்வு ரம்ஜான் பண்டிகையையொட்டி போட்டிபோட்டு வாங்கினர்
ரம்ஜான் பண்டிகையை யொட்டி வெட்டன் விடுதி சந்தையில் வெள்ளாடுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.
2. பெரம்பலூரில் காய்கறி விலை உயர்வு தக்காளி, கேரட் கிலோ ரூ.60-க்கு விற்பனை
பெரம்பலூரில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. தக்காளி, கேரட் கிலோ தலா ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம்
கருங்கல் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றனர்.
4. கழுதை பாலில் தயாரான 100 கிராம் குளியல் சோப்பு விலை ரூ.500; மக்களிடையே பெரும் வரவேற்பு
கழுதை பாலில் தயாரிக்கப்பட்டு ரூ.500க்கு விற்கப்படும் குளியல் சோப்பிற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.