சிவக்குமார சுவாமி மறைவு: கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கியதாக புகழாரம்
சிவக்குமார சுவாமி மறைவுக்கு கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கியதாக புகழாரம் சூட்டினர்.
பெங்களூரு,
சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி மறைவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். குமாரசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சிவக்குமார சுவாமி மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி, உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளை வழங்கினார். நடமாடும் கடவுள் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
சாதி, மதம், எல்லை ஆகியவற்றை கடந்து அவர் அனைத்து தரப்பினருக்கும் ஒரு முன்மாதிரி ஆவார். நான் முன்பு முதல்-மந்திரியாக இருந்தபோது, அவருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டது. இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று நான் கருதுகிறேன்.
சிவக்குமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாங்கள் பரிந்துரை செய்தோம். அவர் இந்த சமுதாயத்திற்கு ஓய்வின்றி, சுயநலமின்றி பாடுபட்டுள்ளார். அதனால் அவருக்கு மத்திய அரசு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “சிவக்குமார சுவாமி மறைந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் அடித்தட்டு மக்களுக்காக சேவையாற்றினார். கல்வி, சமூக சேவைகளில் அவர் பெரிய சாதனை செய்துள்ளார். ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி, உணவு, உறைவிட வசதிகளை செய்து கொடுத்தார். அவரது வாழ்க்கை தீபம் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமா் தேவேகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவக்குமார சுவாமி, இந்த நாடு கண்ட அறிவு உலகம். அவர் தொடங்கிய கல்வி நிலையங்களில் படித்த மாணவர்கள் இன்று பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அவரது தத்துவங்கள் நம்முடன் எப்போதும் இருக்கும். அவர் பிறந்த மண்ணில் பிறந்ததே, நாம் செய்த புண்ணியம். அவர் காட்டிய பாதையில் நாம் பயணிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவக்குமார சுவாமி மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் குணமாகி மீண்டு வருவார் என்று நான் கருதினேன். சமுதாய சேவைகள் மூலம் இந்த உலகத்தை வென்றார். நாம் பசவண்ணரை நேரில் பார்த்தது இல்லை. ஆனால் சிவக்குமார சுவாமியிடம் பசவண்ணரை கண்டேன். ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி, உணவு, உறைவிட வசதிகளை செய்து கொடுத்தார். அவர் அதிகம் பேசியது இல்லை. மவுனமாக இருந்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நான் முதல்-மந்திரியாக இருந்தபோது மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சிவக்குமார சுவாமி மறைவு, மனித குலத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக அவர் பாடுபட்டார். ஏழை குழந்தைகளுக்கு கல்வியை இலவசமாக வழங்கினார். அவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளையும் செய்து கொடுத்தார். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதுதவிர சிவக்குமார சுவாமி மறைவுக்கு கர்நாடக மந்திரிகள், அரசியல் கட்சிகளின் முன்னணி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு மடங்களின் மடாதிபதிகள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story