நாராயண் ரானே மீண்டும் காங்கிரசில் சேர திட்டம்?


நாராயண் ரானே மீண்டும் காங்கிரசில் சேர திட்டம்?
x
தினத்தந்தி 22 Jan 2019 5:13 AM IST (Updated: 22 Jan 2019 5:13 AM IST)
t-max-icont-min-icon

நாராயண் ரானே மீண்டும் காங்கிரசில் சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

கொங்கன் மண்டலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக கருதப்படுபவர் நாராயண் ரானே. இவர் கடந்த 2017-ம் ஆண்டில் காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். இந்தநிலையில் பா.ஜனதா ஆதரவுடன் அவர் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் அவர் மீண்டும் காங்கிரசில் இணையப்போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பாலாசாகேப் தோரட் கூறியதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து பாலாசாகேப் தோரட்டிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தான் அப்படி எதுவும் தெரிவிக்கவில்லை என கூறினார்.

மேலும் காங்கிரஸ் தலைவர் அசோக் சவானும் இந்த தகவலை மறுத்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “இது தொடர்பாக தோரட் என்னிடம் விளக்கம் அளித்தார். நாராயண் ரானேயை கட்சியில் மீண்டும் இணைத்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை” என்றார்.

இதேபோல் நாராயண் ரானேயை தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஊடகத்தில் வெளியாகும் தகவலில் எந்த உண்மையும் இல்லை. நான் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் யாருடனும் தொடர்பில் இல்லை” என்றார்.

Next Story