நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்: முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா


நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்: முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா
x
தினத்தந்தி 22 Jan 2019 5:18 AM IST (Updated: 22 Jan 2019 5:18 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மும்பை,

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு நடக்கும் திருவிழாக்களில் ஒன்றான தைப்பூச திருவிழா நேற்று மும்பையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மும்பையில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில்களில் அதிகாலை முதலே கணபதி ஹோமம் நடந்தது.

முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன. பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாண்டுப் மேற்கில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி நேற்று இரவு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல செம்பூர் செட்டா நகர் முருகன் கோவில், மாட்டுங்கா ஆஸ்திக சமாஜ் முருகன் கோவில், மாகிம் முருகன் கோவில், மலாடு ஒர்லம் சுப்பிரமணியசுவாமி கோவில், டோம்பிவிலி முருகன் கோவில், நெருல் முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இந்த வழிபாடுகளில் கலந்துகொண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.

Next Story