சுசீந்திரத்தில் கோவில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சுசீந்திரத்தில் கோவில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Jan 2019 4:15 AM IST (Updated: 22 Jan 2019 8:45 PM IST)
t-max-icont-min-icon

கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் ஊழியர்கள் நேற்று சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட கோவில் இணை ஆணையர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சுசீந்திரம்,

குமரி மாவட்ட கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன. இவற்றில் பல கோவில்களில் காவலர், பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் இடங்கள் காலியாக உள்ளன. காலிப்பணியிடங்களை நிரப்பி, கோவில்களில் முழு நேர பூஜை நடைபெற நடவடிக்கை எடுக்கவேண்டும். கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் ஊழியர்கள் நேற்று சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட கோவில் இணை ஆணையர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தை முன்னாள் எம்.பி. பெல்லார்மின் தொடங்கி வைத்தார்.

குமரி மாவட்ட அலுவலர்கள் சங்கத் தலைவர் ராமசந்திரன், சி.ஐ.டி.யு. மாவட்ட உதவி செயலாளர் வல்சகுமார் மற்றும் பிரமுகர்கள் பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோவில் பூசாரிகள், தவில் வித்துவான்கள், கோவில் காவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story