9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2019 11:00 PM GMT (Updated: 22 Jan 2019 7:58 PM GMT)

கரூர் மாவட்டத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

தமிழக அரசு ஊழியர் களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் களுக்கும், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அரசு பணி யாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிற வகையில் அமைக்கப்பட்டுள்ள பணி யாளர்கள் பகுப்பாய்வு குழுவினை தமிழக அரசு ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று கரூர் தாலுகா அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர்கள் சங்க செயலாளர் மகாவிஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க ஒருங்கிணைப்பாளர்கள் வேலுமணி, குமாரசாமி, இருதயசாமி ஆகியோர் முன்னிலை வகித்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் உள்ள சங்கங்களான தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரசு ஊழியர்கள் சங்கம், பட்டதாரி ஆசிரியர் கழகம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரசு பணி யாளர்கள் சங்கம், உயர்நிலை-மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட 36 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல கிருஷ்ணராய புரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு போராட்ட குழு ஒருங் கிணைப்பாளர் மோகன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் செல்வராசு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதேபோல குளித்தலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஒருங்கிணைப் பாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடவூர் ஒன்றிய ஜாக்டோ-ஜியோ சார்பில் வேலை நிறுத்த போராட்டம் தரகம்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ கூட்டு தலைவர் முனியப்பன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

கரூர் மாவட்டத்தில் 980 அரசு பள்ளிகளில் 6280 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் நேற்று காலை நடந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு 5600 ஆசிரியர்கள் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டதால், 700 பள்ளிகள் மூடப்பட்டன என்று சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதேபோல் அரசு ஊழியர்கள் பெரும் பாலானோர் பணிக்கு செல்லாததால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 

Next Story