ஸ்கூட்டரில் சென்ற பெண் மீது மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலி பறிப்பு


ஸ்கூட்டரில் சென்ற பெண் மீது மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 22 Jan 2019 10:15 PM GMT (Updated: 22 Jan 2019 9:03 PM GMT)

புத்தாநத்தம் அருகே பெண் மீது மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.

மணப்பாறை,

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள புங்குருணிப்பட்டியை சேர்ந்தவர் நேருச்சாமி மனைவி பிரியா(வயது 27). இவர் நேற்று காலை ஊனையூரில் உள்ள தந்தை வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் புங்குருணிப்பட்டி நோக்கி சென்றார். புத்தாநத்தத்தை அடுத்த மருங்காபுரி அருகே உள்ள முத்தாழ்வார்பட்டி பிரிவு சாலையில் சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென பிரியாவை வழிமறித்து அவர் மீது மிளகாய் பொடியை தூவி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரியா, சங்கிலியை பறிக்க விடாமல் போராடினார். இருப்பினும் அவரிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர், மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை விரட்டி சென்றனர். ஆனால் அந்த நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து பிரியா புத்தாநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story