நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு
நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆசியா மரியம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல்,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையொட்டி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் திருச்செங்கோடு விவேகானந்தா பெண்கள் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட உள்ளது. இந்த மையங்களில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான உறுதியான அறை, வாக்கு எண்ணும் அறை உள்ளிட்ட வசதிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு முன்னிலையில் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வேட்பாளர்களின் முகவர்கள், அரசு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருவதற்கான பாதை அமைப்பு, பாதுகாப்பு வசதிகள், செய்தியாளர்களுக்கான அறை உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தேவிகாராணி, உதவி ஆணையர் (கலால்) இலாஹிஜான், துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் மற்றும் தாசில்தார்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story