கணியம்பாடி அருகே நிர்வாண நிலையில் தூக்கில் ஆண் பிணம்


கணியம்பாடி அருகே நிர்வாண நிலையில் தூக்கில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 22 Jan 2019 11:27 PM GMT (Updated: 2019-01-23T04:57:41+05:30)

கணியம்பாடி அருகே நிர்வாண நிலையில் தூக்கில் ஆண் பிணம் தொங்கியது. அவர் யார்?, கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர், 

கணியம்பாடி அருகே தனியார் நர்சிங் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் நேற்று காலை ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து நெல்வாய் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர், இதுபற்றி வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்குசென்று பார்வையிட்டனர். அங்கு மஞ்சள் நிற வேட்டியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார்.

அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story