வானவில் : உடற்பயிற்சிக்கு பயிற்சியாளராகும் டோனல்
உடலை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைத்துக் கொள்ள உடற்பயிற்சி அவசியம்.
எல்லாருக்கும் ஜிம்முக்கு போய்வர நேரம் இருப்பதில்லை. வீட்டிலேயே ஒரு பயிற்சியாளர் இருந்து நமக்கு கற்பித்தால் எப்படி இருக்கும்? இதை தான் செய்கிறது இந்த டோனல் எனப்படும் கருவி. பார்ப்பதற்கு ஒரு எல்.இ.டி டி.வி.யை செங்குத்தாக சுவரில் நிறுத்தி வைத்தது போல் இருக்கிறது.
இருபுறமும் இரண்டு சங்கிலி போன்ற அமைப்புகள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான உடற்பயிற்சிகள் இதில் இருக்கின்றன. பயிற்சியாளர்களை நமது விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம். தேர்வு செய்த பயிற்சியாளர் தினமும் திரையில் தோன்றி நம்மை ஊக்கப்படுத்தி பயிற்சி செய்ய வைப்பார்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் என்றாலும் நமக்காகவே சொல்லித் தருகிறார் போன்ற உணர்வை ஏற்படுத்தும். முதல் முறை பயிற்சி செய்பவர்களுக்கு படிப்படியாக சொல்லித் தருகிறது இந்த கருவி.
இருபுறமிருக்கும் சங்கிலிகளை இழுத்து பளு தூக்கும் பயிற்சியையும் செய்யலாம். தினமும் 30 நிமிடம் பயிற்சி செய்தாலே போதுமானது.
நமது உடலை உறுதியாக்கிவிடும். தினசரி நாம் எவ்வளவு கலோரிகள் குறைத்திருக்கிறோம் என்பதையும் தெரியப்படுத்தி விடும்.
Related Tags :
Next Story