வானவில் : பல வசதிகள் கொண்ட ஸ்மார்ட் பேக்
ஸ்மார்ட் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் புதிதாக வந்திருக்கிறது லும்சாக் எனப்படும் இந்த ஸ்மார்ட் பேக்.
கார்பன் இழைகளால் செய்யப்பட்டுள்ள இந்த பேக் நம் பொருட்களை வைத்துக் கொள்ள மட்டும் பயன்படும் சாதாரண பை இல்லை. இதில் நமது ஸ்மார்ட்போன் மற்றும் அனைத்து சாதனங்களையும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்.
இருட்டாக இருக்கும் இடத்தில் தானாகவே விளக்கு எரிந்து அந்தப் பகுதியை வெளிச்சமாக்கும். யாரேனும் நமது பேக்கை தொட்டாலோ திருட முயன்றாலோ ஸ்மார்ட் போன் செயலி மூலம் நமக்கு எச்சரிக்கை வந்து விடும்.
எங்கேனும் பேக்கை மறந்து வைத்து விட்டால் இதனுள் இருக்கும் ட்ராக்கர் மூலம் நமது போனுக்கு பேக் இருக்கும் இருப்பிடத்தை தகவலாக அனுப்பி விடும். இந்த பேக்கை நாம் மாட்டி கொண்டு நடந்து செல்லும் போது நமக்கு பின்னால் நடப்பதையும் பின்புறமிருக்கும் கேமரா மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இணையம் இல்லாத இடத்திலும் கூட வை-பை மூலம் இணையத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும். தினசரி மறக்காமல் எடுத்து செல்ல வேண்டிய பொருட்களின் பட்டியலை செயலியில் பதிவு செய்துவிட்டால் போதும், நாம் அதில் ஏதேனும் ஒரு பொருளை எடுத்து வைக்க மறந்தால் கூட உடனே நமது போனுக்கு மெசேஜ் அனுப்பி ஞாபகப்படுத்தும். இந்த பேக் மூன்று வடிவங்களில் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இவ்வளவு வசதியுள்ள பேக்கை யாருக்கு தான் பிடிக்காது.
Related Tags :
Next Story