வானவில் : இயந்திர பாலாடைக்கட்டிகள்


வானவில் : இயந்திர பாலாடைக்கட்டிகள்
x
தினத்தந்தி 23 Jan 2019 4:23 PM IST (Updated: 23 Jan 2019 4:23 PM IST)
t-max-icont-min-icon

வழக்கமாக பாலாடைக்கட்டிகளை பாலில் இருந்து தான் தயாரிப்பார்கள். ஆனால் சூரிய ஒளியில் இருந்து தயாரித்து அதற்கு சன் மேடு சீஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

ஆனால் இவைகள் எல்லாம் இயந்திர பாலாடைக்கட்டிகள். வேடிக்கையாக தங்கள் தயாரிப்புகளுக்கு பால் பொருட்களின் பெயர்களை வைத்துள்ளனர் நிறுவனத்தினர். ஒரு தட்டை வடிவ தட்டு மைய அமைப்பாக செயல்படுகிறது.

இதனை நமது கைப்பை, ஜன்னல் என்று சூரிய ஒளி படக்கூடிய இடங்களில் எங்கு வேண்டு மானாலும் தொங்க விடலாம். கிடைக்கும் சூரிய சக்தியை இந்த தட்டு வாங்குமே தவிர சேமிக்காது. ஒரு பாட்டில் போன்ற இணைப்பை தட்டுடன் இணைத்தால், ஒளியிலிருந்து பெறப்படும் சக்தியை அது சேமிக்கிறது.

இதனை பால் பாட்டில் என்று அழைக்கின்றனர். பாலில் இருந்து வெண்ணெய், தயிர், சீஸ் போன்ற பல பொருட்களை பெற முடிவதைப் போன்று சூரிய சக்தியின் மூலம் இயங்கும் சார்ஜர், பவர் பேங்க், டார்ச் லைட், ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் ரேடியோ ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி இருக்கிறது இந்த கருவி.

இப்படி இயங்கும் கருவிகள் அனைத்திற்கும் பாலாடைக்கட்டிகளின் பெயரை வைத்துள்ளனர். அவசரத்திற்கு விளக்கு ஏற்ற லைட்டர் ஒன்றும் உள்ளது. பால் பாட்டிலில் காந்தம் இருப்பதால் அது எந்த கருவியோடும் ஒட்டிக்கொண்டு சேமித்த சக்தியை விநியோகிக்கிறது. குறைந்த நேரத்தில் ஐந்து வோல்ட் சக்தியை தயாரிக்க கூடியது இந்த அமைப்பு.

Next Story