வருகிறது நிசான் கிக்ஸ்


வருகிறது நிசான் கிக்ஸ்
x
தினத்தந்தி 23 Jan 2019 4:31 PM IST (Updated: 23 Jan 2019 4:31 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டோமொபைல் துறையில் இப்போதைய பேச்சு முழுக்க முழுக்க நிசானின் புதிய தயாரிப்பான கிக்ஸ் மாடலைப் பற்றித்தான்.

ஏறக்குறைய செயற்கை நுண்ணறிவு அதிகம் புகுத்தப்பட்ட வாகனமாக இது அறிமுகமானதிலிருந்தே சந்தையில் அதிகம் பேசப்படும் காராக மாறிவிட்டது. இப்போது இந்நிறுவனம் இந்த காருக்கான முன்பதிவை தொடங்கிவிட்டது. ரூ.25 ஆயிரத்தை முன் தொகையாக செலுத்தி இந்தக் காருக்கு முன் பதிவு செய்யலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது.

எஸ்.யு.வி. ரக மாடலான இந்த காரை ஆன்லைன் மூலமும் முன் பதிவு செய்யும் வசதியை இந்நிறுவனம் உருவாக்கிஉள்ளது.

மிகவும் உறுதியான, பாதுகாப்பான வாகனமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய சாலைகளுக்கேற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பின்பற்றப்படும் ரூபிங் (மேற்கூரை) தொழில்நுட்பம் இதிலும் உள்ளது. புளோட்டிங் ரூப் டிசைனும் இதில் உள்ளது.

அதேபோல ஸ்டைலான ரூப் ரயில், அழகிய எல்.இ.டி. விளக்கு, சுறாவின் துடுப்பு போன்ற ஆன்டெனா, கதவுகளில் ஒளிரும் இன்டிகேட்டர் ஆகியன இந்தக் காருக்கு கம்பீரமான தோற்றத்தை அளிப்பதில் வியப்பில்லை. இதன் முகப்பு விளக்குகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்படுள்ளன.

பூமராங் வடிவிலான பின்புற விளக்குகள் இந்தக் காருக்கு புதிய தோற்றப் பொலிவை அளிக்கின்றன. உள்பகுதியில் பிரவுன் மற்றும் கருப்பு நிறக் கலவையிலான கார்பன் பைபர் பினிஷிங், மிருதுவான தோலினால் சுற்றப்பட்ட டாஷ் போர்டு, தானாக செயல்படும் ஏ.சி. வசதி, கால்கள் வைக்க தாராளமான இடவசதி ஆகியன இந்தக் காரின் சிறப்பம்சங்களாகும்.

டிக்கியில் 400 லிட்டர் வசதி உள்ளதால் அதிக அளவில் லக்கேஜ்களை ஏற்றமுடியும். ஏ.பி.எஸ், இ.பி.டி., பிரேக்கிங் அசிஸ்டென்ஸ் வசதி, குரூயிஸ் கண்ட்ரோல், முன் பகுதியில் மட்டுமின்றி பின்பகுதியிலும் கடும் குளிரிலும் ஒளிரும் பாக் விளக்கு உள்ளிட்ட வசதிகளைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Next Story