வானவில் : அனைத்து வசதிகளைக் கொண்ட டோடோ


வானவில் : அனைத்து வசதிகளைக் கொண்ட டோடோ
x
தினத்தந்தி 23 Jan 2019 11:28 AM GMT (Updated: 23 Jan 2019 11:28 AM GMT)

இன்றைய காலகட்டத்தில் நமக்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் சிறிய கையடக்கமான டோடோ கருவியில் கொண்டு வந்திருக்கின்றனர்.

இந்த குட்டி கருவியில் 12 ஜி.பி. அளவு சேமிப்பு வசதியுள்ள எம்.பி.3 பிளேயர் உள்ளது. நம்முடைய முக்கியமான ஆவணங்களை சேமித்து வைக்க மூன்று ஹார்ட் டிஸ்க்குகள் இதனுள் உள்ளது.

இந்த டிஸ்க்குகளில் மொத்தம் 96 ஜி.பி. அளவுள்ள மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதால் நமது பைல்களை சேமித்துக் கொள்ளலாம்.

நமது செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் டோடோவை பயன்படுத்தி ஒரு யூ.எஸ்.பி. கேபிள் துணையுடன் சார்ஜ் செய்யலாம். அதாவது ஒரு பவர் பேங்காகவும் செயல்படுகிறது டோடோ. நாற்பது எல்.இ.டி. விளக்குகள் கொண்ட பிளாஷ் லைட்டும் டோடோவில் இருப்பதால் நல்ல வெளிச்சம் கிடைக்கிறது.

நாம் சேமித்து வைத்துள்ள தகவல்களை யூ.எஸ்.பி. கேபிள் மூலம் லேப் டாப், டேப்லெட், கணினி ஆகியவற்றில் பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனி கருவிகளை சுமக்காமல் ஒரே ஒரு டோடோ கருவியில் அனைத்தையும் பெறலாம்.

Next Story