மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதியது: மதுபான விடுதி ஊழியர்கள் 2 பேர் சாவு


மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதியது: மதுபான விடுதி ஊழியர்கள் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 24 Jan 2019 4:00 AM IST (Updated: 23 Jan 2019 11:27 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் மதுபான விடுதி ஊழியர்கள் 2 பேர் இறந்தனர்.

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா லோக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ்(வயது 31), அதே கிராமத்தை சேர்ந்தவர் பசவய்யா(52). இவர்கள் 2 பேரும் பி.ஜி.பாளையா பகுதியில் உள்ள மதுபான விடுதியில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வேலை முடிந்ததும் மகேசும், பசவய்யாவும் மோட்டார் சைக்கிளில் லோக்கனஹள்ளிக்கு சென்று கொண்டு இருந்தனர். மகேஷ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

லோக்கனஹள்ளி அருகே பசவனஹள்ளி பகுதியில் வந்த போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மகேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பசவய்யாைவ அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவரும் இறந்து விட்டார். விபத்து பற்றி அறிந்த ஹனூர் போலீசார் மகேஷ், பசவய்யா ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஹனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story