விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு திருச்சியில் நடந்தது மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு திருச்சியில் நடந்தது மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 24 Jan 2019 4:45 AM IST (Updated: 24 Jan 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு திருச்சியில் நடந்தது. மாநாட்டில் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்சி,

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் ‘தேசம் காப்போம் மாநாடு‘ நேற்று மாலை நடந்தது. மாநாட்டிற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.

மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி, புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் மத்திய மந்திரி கொடிக்குனில் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி, மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக் கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அரசியலமைப்பு சட்டம் மற்றும் தேசத்தை பாதுகாப்போம். சமூகநீதியை பாதுகாப்போம். வகுப்புவாத வன்முறை தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். சபரிமலை தீர்ப்பை ஆதரிப்போம். ஆணவக்கொலைகள் தடுப்பு சட்டம் இயற்ற வேண்டும். காவிரி உரிமையை காப்போம். மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான வன்முறையை கைவிட வேண்டும். அணை பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும். கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்த்திட வேண்டும். விகிதாசார பிரதிநிதித்துவ முறையை கொண்டு வர வேண்டும். மகளிர் இடஒதுக்கீடு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்பட மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Next Story