ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் மீனவர்களும் பங்கேற்க வேண்டும் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்


ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் மீனவர்களும் பங்கேற்க வேண்டும் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 Jan 2019 4:45 AM IST (Updated: 24 Jan 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் மீனவர்களும் பங்கேற்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்தார்.

வேதாரண்யம்,

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், வேதாரண்யம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் சந்திப்பு பிரசார பயணம் நடந்தது. வாய்மேடு, மருதூர், கரியாப்பட்டினம், செம்போடை, புஷ்பவனம், தலைஞாயிறு, திருக்குவளை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரசாரத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

இந்த பிரசார பயணத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் புண்ணியமூர்த்தி, அமைப்பு செயலாளர் ஸ்ரீதர், மாநில துணைச்செயலாளர் செந்தில்குமார், நாகை மாவட்ட செயலாளர் ராமுதாஸ், தஞ்சை மாவட்ட செயலாளர் மணி, வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் தியாகராஜன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருக்காரவாசல் கிராமத்தை மையமாகக் ெ-்காண்டு ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தால் கடலூர் முதல் கோடியக்கரை வரையிலான கடலோர பகுதி பேரழிவுக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயம் மட்டுமல்லாது மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனவே இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி குடியரசு தினத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

திருக்காரவாசலில் நாளை மறுநாள்(சனிக்கிழமை) நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும். இந்த திட்டத்தை எதிர்்த்து தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களில் விவசாயிகள் மட்டுமல்்லாது மீனவர்களும் பங்கேற்க வேண்டும்.

கஜா புயலால் புஷ்பவனம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் களிமண்ணில் புதையுண்டு கிடக்கும் படகுகளை மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story