ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்: தஞ்சை மாநகராட்சி பள்ளியில் பாடம் நடத்திய மாணவி
ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தஞ்சை வண்டிக்காரத்தெரு மாநகராட்சி நடு நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் பாடம் நடத்தினார்.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.
தஞ்சை வண்டிக்காரத்தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் 100 பேர் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகிறார்கள். இந்த பள்ளியை சேர்ந்த 4 ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் பாடம் நடத்த ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதை அறியாத மாணவ-மாணவிகள் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்தனர். நேரம் செல்ல, செல்ல தங்கள் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் வராததால் மாணவ-மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், சிறிய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தினார். இதை அறிந்த மாணவர்களின் பெற்றோர் ஆச்சரியம் அடைந்தனர்.

Related Tags :
Next Story