2-வது நாளாக வேலை நிறுத்தம் பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் 1,035 பேர் கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டதாக 1,035 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்,
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அரசு பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பினை பறிக்கிற வகையில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் பகுப்பாய்வு குழுவினை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
3 ஆயிரத்து 500 தொடக்க பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடும் முடிவை யும் கைவிட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தப்படுவதை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதேபோல, இந்த அமைப்பினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலை நிறுத்தத்தின் 2-வது நாளான நேற்று மறியலில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி, மறியல் போராட்டம் நடத்து வதற்காக பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் முன்பு காலையிலேயே ஒன்று திரண்டனர்.
பின்னர் ஜாக்டோ-ஜியோவின் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான ராஜேந்திரன், ராஜ்குமார், தயாளன், ராமர், கவியரசன், அருள்ஜோதி ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல் நடத்துவதற்காக அங்கிருந்து புறப்பட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் அந்த வழியாக வாகனங்கள் அதிகமாக வராததால் அவர்கள் மறியலை கைவிட்டு, பாலக்கரை ரவுண்டானா பகுதியில் மறியல் போராட்டம் நடத்த போகிறோம் என்று போலீசாரிடம் கூறினர். பின்னர் அங்கிருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு பாலக்கரை ரவுண்டானா பகுதியை வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது போராட்டக்காரர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலை கைவிடவில்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தனர். ஆனாலும் அவர்கள் மறியலை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 580 பெண்கள் உள்பட 1,035 அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். மறியல் போராட்டத்தில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பில் உள்ள சங்கங்களான தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரசு ஊழியர்கள் சங்கம், பட்டதாரி ஆசிரியர் கழகம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரசு பணியாளர்கள் சங்கம், உயர்நிலை-மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட 36 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வராவிட்டால் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story