தட்டார்மடம் அருகே துணிகரம் மூதாட்டியிடம் 7½ பவுன் நகை பறிப்பு
தட்டார்மடம் அருகே தோட்டத்தில் வாழை இலை பறிப்பது போன்று நடித்து மூதாட்டியிடம் 7½ பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
தட்டார்மடம்,
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே பூச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசு மரியான். விவசாயி. இவருடைய மனைவி தெரசா அம்மாள் (வயது 75). இவர் நேற்று காலையில் பூச்சிக்காடு விலக்கு பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றார். அவர், தனது கையில் அரிவாளை வைத்து கொண்டு, தோட்டத்தை பார்வையிட்டு கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக 35 வயது மதிக்கத்தக்க மர்மநபர் ஒருவர் வந்தார். அவர் தெரசா அம்மாளிடம் தோட்டத்தில் சில வாழை இலைகளை பறித்து கொள்வதாக கூறினார். இதற்கு அவர் சம்மதித்தார். உடனே அந்த நபர், வாழை இலைகளை அறுப்பதற்கு அரிவாளைத் தருமாறு கேட்டார். தெரசா அம்மாளும் மர்மநபரிடம் அரிவாளை கொடுத்தார். பின்னர் அந்த நபர் வாழை இலைகளை பறித்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த நபர் திடீரென்று தெரசா அம்மாளின் பின்புறமாக சென்று, அவரது கழுத்தில் அணிந்து இருந்த 7½ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தெரசா அம்மாள் ‘திருடன் திருடன்‘ என்று கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர் காட்டுப்பகுதி வழியாக தப்பி ஓடிவிட்டார்.
அரிவாளுடன் இருந்த தெரசா அம்மாளிடம் நகையை பறித்தால், வெட்டி விடுவார் என்று கருதிய மர்மநபர், அவரிடம் இருந்த அரிவாளை ஏமாற்றி வாங்கி, நகையை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story