கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியன் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கொக்குபார்க் அருகில் உள்ள இந்தியன் வங்கி புதுவை மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி,
இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கொக்குபார்க் அருகில் உள்ள இந்தியன் வங்கி புதுவை மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் உதவி செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், ராணி மாணிக்கசுந்தரி, வைத்தியநாதன், கண்ணையன், விழுப்புரம் மாவட்ட ஊழியர் சங்க தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி பகுதியில் உள்ள ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தியன் வங்கியில் உள்ள எழுத்தர், கடைநிலை ஊழியர், ஓட்டுனர், துப்புரவு தொழிலாளர் உள்ளிட்ட பதவிகள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. அந்த பணியிடங்களில் தற்போது தினசரி சம்பளத்தில் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். வங்கியில் பணிபுரியும் அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும், நகை மதிப்பீட்டாளர்களுக்கான கமிஷன் தொகை மற்றும் நகை பரிசோதனை தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Tags :
Next Story