கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Jan 2019 3:15 AM IST (Updated: 24 Jan 2019 9:53 PM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடத்தூர், 

கோபி அருகே எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் 1 மணி அளவில் வீட்டுக்கு குமாரசாமி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு இருந்த பீரோ திறந்து கிடந்ததோடு, அதில் வைக்கப்பட்டு இருந்த 4 பவுன் நகையை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லை என்பதை அறிந்து கொண்ட மர்ம நபர்கள், நகையை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதேபோல் குமாரசாமியின் வீட்டின் அருகே உள்ள பாப்பம்மாள் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்து ரூ.20 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்று உள்ளனர்.

இதுபற்றி உடனடியாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திருட்டு நடந்த வீடுகளை பார்வையிட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story