நெல்லை அருகே இரட்டைக் கொலை: சரண் அடைந்த 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு மேலும் 5 பேருக்கு வலைவீச்சு


நெல்லை அருகே இரட்டைக் கொலை: சரண் அடைந்த 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு மேலும் 5 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Jan 2019 3:00 AM IST (Updated: 25 Jan 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே நடந்த இரட்டைக் கொலையில் சரண் அடைந்த 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

நெல்லை, 

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த கீழசெவல் நயினார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்குட்டி (வயது 47) விவசாயி. இவருடைய மனைவி செல்வி (40). இவர்களுக்கு அம்மையப்பன் (22), மகராஜன் (20) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். செல்வியுடன், 2 மகன்களும் வசித்து வருகின்றனர்.

செல்லக்குட்டி, அதே ஊரை சேர்ந்த நண்பரான விவசாயி வேல்சாமி (40) என்பவருடன் சேர்ந்து தினமும் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. செல்லக்குட்டி தங்களது தாய் செல்வியுடன் சேர்ந்து வாழாததற்கு வேல்சாமிதான் காரணம் என்று மகன்கள் அம்மையப்பன், மகராஜன் ஆகியோரும், உறவினர்களும் நினைத்தனர்.

சம்பவத்தன்று ஊருக்கு வெளியே உள்ள மதுக்கடைக்கு செல்லக்குட்டியும், வேல்சாமியும் மது குடிக்க சென்றனர். அங்கு செல்லக்குட்டியின் மகன்கள் மற்றும் உறவினர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 2 பேரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக செல்லக்குட்டியின் மகன் மகராஜன், அவரது உறவினர் மாடக்கண்ணு ஆகியோர் நெல்லை கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர்.

இந்த வழக்கில் அம்மையப்பன், அரிராமன், ரமேஷ், மணி, மாரியப்பன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசில் சரண் அடைந்த 2 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Next Story