போலி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து ஏமாற வேண்டாம் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட்டு அதிகாரி வேண்டுகோள்
போலி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து ஏமாறவேண்டாம் என்று பொதுமக்களுக்கு பாஸ்போர்ட்டு அதிகாரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
திருச்சி,
சமீபகாலமாக www.pass-p-o-rt-o-n-l-i-n-e-i-n-d-ia.com என்ற போலி இணையதளத்தின் மூலமாக பாஸ்போர்ட்டு விண்ணப்பதாரர்களை குறி வைத்து ஒரு கும்பல் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருவது தெரிய வந்து உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த இணையதளத்தில் விண்ணப்பம் செய்து முன் அனுமதி தேதி கிடைக்காமலும், கூடுதல் பணம் கட்டியும் ஏமாறவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த இணையதளம் பொதுமக்களிடம் இருந்து தகவல்களை திருடி ஏமாற்றி வருகிறது.
பாஸ்போர்ட்டு அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் https:// www.pass-p-o-rt-i-n-d-ia.gov.in என்ற இணைய முகவரியில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் மட்டுமே பொதுமக்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்து பயன் அடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
போலி இணையதளத்தின் மூலம் பல விண்ணப்ப தாரர்கள் ஏமாற்றப்பட்ட சம்பவங்கள் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய வெளிவிவகார துறைக்கு பல புகார்கள் செய்யப்பட்டு அவை விசாரணையில் உள்ளன. திருச்சி மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்திற்கு இதுபோன்ற புகார்கள் இதுவரை வரவில்லை என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related Tags :
Next Story