மும்பை சயானில் மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்து 4 கல்லூரி மாணவர்கள் படுகாயம்
சயானில் மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பை,
மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள சயான்- மாட்டுங்கா இடையே நேற்று ஸ்லோ வழித்தட தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் ஸ்லோ ரெயில்கள் விரைவு வழித்தடத்தில் திருப்பிவிடப்பட்டது. இதன் காரணமாக ரெயில்களில் கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதியது.
அப்போது, விரைவு வழித்தடத்தில் ஸ்லோ மின்சார ரெயில் ஒன்று வேகமாக தாதர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பயணிகள் பலரும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
அந்த ரெயில் சயான்- மாட்டுங்கா இடையே உள்ள பாலத்திற்கு அடியில் சென்றபோது, ஒரு பெட்டியின் வெளியே தொங்கிக்கொண்டு பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதினர்.
இதில், 4 பேரும் அடுத்தடுத்து ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இதைப்பார்த்து மற்ற பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார்கள். மேலும் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சயான் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விசாரணையில், அவர்கள் தாராவி கிழக்கு பகுதியை சேர்ந்த அபிஷேக் சர்மா(வயது16), காட்கோபரை சேர்ந்த ஆனந்த் சிங், பூல்சந்த் யாதவ்(16), அர்ஜூன் அவுஜா(17) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் 4 பேரும் கரிரோட்டில் உள்ள ஜூனியர் கல்லூரியில் 11-ம் வகுப்பு படித்து வருவதும், கல்லூரிக்கு தேர்வு எழுத செல்லும் போது, இந்த விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. இதில் அபிஷேக் சர்மாவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்ததும் ஆஸ்பத்திரியில் மாணவர்களின் குடும்பத்தினரும், உடன் படிக்கும் மாணவர்களும் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.
இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story