ஐ.என்.எஸ். கடற்படை விமானதளத்தில் குடியரசு தினவிழா முதல் முறையாக கடற்படை வீரர்களுடன் மாணவர்கள் அணிவகுப்பு
ஐ.என்.எஸ். கடற்படை விமான தளத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. முதல் முறையாக கடற்படை வீரர்களுடன் இணைந்து பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.
பனைக்குளம்,
உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து இந்திய கடற்படை விமான தளத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவையொட்டி நேற்று காலை 8 மணிக்கு விமான தளத்தில் கமாண்டர் வெங்கடேஷ் அய்யர் தேசிய கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து விமான தளத்தில் நடைபெற்ற கடற்படை வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையுடன் முதல்முறையாக பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.
விழாவில் விமாள தள கமாண்டர் வெங்கடேஷ் அய்யர் பேசியதாவது:-
கடற்படை வீரர்களுடன் சேர்ந்து குடியரசு தினவிழா கொண்டாடும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கின்றேன்.நாட்டின் எதிர்காலம் மாணவர்களாகிய உங்கள் கையில் உள்ளது. கடற்படை வீரர்களுடன் மாணவர்களாகிய நீங்களும் அணிவகுப்பில் கலந்துகொண்டது மேலும் உங்களை ஊக்கப்படுத்தும். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஒரு சிறந்த மனிதர். அவரை பின்பற்றி மாணவர்களும் வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கமாண்டர் கோசாவி மற்றும் உச்சிப்புளி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளை சேர்ந்த 4 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும்,ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற் படையின் ஹெலிகாப்டர்கள் மற்றும் டார்னியர் விமானத்தையும் மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story