குடியரசு தினத்தையொட்டி ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
குடியரசு தினத்தையொட்டி ஊராட்சிகளில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
குடியரசு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மதியநல்லூர் ஊராட்சியில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கணேஷ் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், திட்ட அறிக்கை, குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.
18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்தல், 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நடைபெறும் குழந்தை திருமணத்தை தடுத்தல், பாலியல் வன்கொடுமை தடுத்து நிறுத்துதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆதரவற்ற குழந்தைகளை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்து சட்ட ரீதியாக தத்தெடுத்தலை நடைமுறைப்படுத்துதல், பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை இல்லங்களில் சேர்த்து படிக்க வைத்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குடிநீர் தேவைக்கு முன்னுரிமை அளித்து பணியாற்ற அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பேராம்பூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நாகராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் வசந்தி வரவேற்று பேசினார். இதில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது செலவினங்கள் திட்ட அறிக்கை, தற்போது கோடைகாலம் நெருங்குவதால் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்வது. ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
வானதிரையன்பட்டி ஊராட்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை தலைமையிலும், ஆவூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய அலுவலர் கார்த்தி தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
இதேபோல குன்னத்தூர், மாத்தூர், மண்டையூர், பாலாண்டாம்பட்டி, களமாவூர், நீர்பழனி, விளாப்பட்டி, பாக்குடி, சூரியூர், கத்தலூர், வேலூர் உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தந்த ஊராட்சி செயலாளர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விராலிமலை ஒன்றியம் வடுகப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நாகராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் டெங்கு காய்ச்சல், தொழு நோய் வராமல் தடுத்தல் உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் விராலிமலை ஒன்றியத்தில் உள்ள விராலிமலை, மேப்பூதகுடி, பூதகுடி உள்பட 44 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அரிமளம் ஒன்றியம் ராயவரம், கடியாப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு ) கவுரி கலந்து கொண்டார். கூட்டத்தில் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி ஒன்றியம், ரெத்தினகோட்டை ஊராட்சி, கூத்தாடிவயல் நரிக்குறவர் காலனியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தெருவிளக்கு, தார்சாலை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு, குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Related Tags :
Next Story