ஈரோட்டில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
ஈரோட்டில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு,
குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், கட்சி அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேசிய கொடியை ஏற்றி விழாவை பொதுமக்கள் கொண்டாடினர்.
ஈரோடு சம்பத்நகரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் முதன்மை மாவட்ட நீதிபதி என்.உமாமகேஸ்வரி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பி.மோகன் இனிப்புகளை வழங்கினார். விழாவில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் தேசிய கொடியை ஏற்றினார். இந்த விழாவில் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் ரவிசந்திரன், விஜயகுமார், உதவி ஆணையாளர்கள் அசோக்குமார், சண்முகவடிவு மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், முன்னாள் கவுன்சிலர் விநாயகமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். விழாவில் மண்டல தலைவர்கள் அயூப்அலி, திருச்செல்வம், ஜாபர்சாதிக், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் பாஷா, நிர்வாகிகள் பெரியசாமி, பாபு என்கிற வெங்கடாசலம், கண்ணப்பன், காமராஜ்பூபதி, கனகவதி, பாலதண்டாயுதம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் பி.விஜயகுமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விடியல் சேகர் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சி.எஸ்.கவுதமன், மண்டல தலைவர் மணியன், மாவட்ட துணைத்தலைவர் கதிர்வேல், வட்டார தலைவர் புவனேஸ்வரன், நிர்வாகிகள் விஜயன், ரபீக், சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் சூரம்பட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.
ஈரோடு எஸ்.கே.சி.ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுமதி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தர்மசிவம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னாள் கவுன்சிலர் பரிமளா ராஜேந்திரன் இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சங்க இணைச்செயலாளர் கதிர்வேல் மற்றும் ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருநகர் காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியை அருணாதேவி தலைமையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் காவிரிரோடு மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம், காளைமாட்டு சிலை மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம் உள்பட ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாநகராட்சி 18-வது வார்டுக்கு உள்பட்ட காமதேனுநகரில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் குடியரசு தின விழா நடந்தது. விழாவில் தேசிய கொடியை கோபால்சாமி ஏற்றி வைத்தார். இதில் ஹரிதாஸ், ரவி, கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கருங்கல்பாளையம் பாரதியார் கிளை நூலகத்தில் நடந்த விழாவில் வாசகர் வட்ட தலைவர் என்.சிவநேசன் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். துணைத்தலைவர் அருண், வக்கீல் பத்மாவதி ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். இதில் நூலக அதிகாரி சர்மிளா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள டாக்டர் ஆர்.ஏ.என்.எம். கலை அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் முதலியார் கல்வி அறக்கட்டளையின் தலைவர் யு.என்.முருகேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இதில் செயலாளர் கே.கே.பாலுசாமி, பொருளாளர் ஏ.விஜயகுமார், இணைச்செயலாளர் பி.அருண்குமார், துணைத்தலைவர்கள் கே.பி.மணி, வி.ராஜமாணிக்கம், பி.பி.மாணிக்கம், கல்லூரியின் முதல்வர் ஏ.பழனியப்பன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஈரோடு பூந்துறைரோட்டில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளிக்கூட தலைவர் என்.முத்துசாமி வரவேற்று பேசினார். ஈரோடு ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் தலைவர் சண்முகம் தேசிய கொடியை ஏற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு எஸ்.கோமதி பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பள்ளிக்கூட துணைத்தலைவர்கள் கே.ஈஸ்வரமூர்த்தி, ஏ.கோபாலன், தாளாளர் சி.பி.சந்திரசேகரன், துணைச்செயலாளர்கள் என்.கோகுல சந்தானகிருஷ்ணன், கே.நாகராஜன், பொருளாளர் வி.என்.சுப்பிரமணியம், முதல்வர் எல்.முத்துகிருஷ்ணன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஈரோடு அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி அறக்கட்டளை பொருளாளர் கிருஷ்ணன் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாணவ-மாணவிகளுக்கு மாறுவேட போட்டி நடத்தப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
விழாவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் குமாரசாமி, சச்சிதானந்தன், பள்ளிக்கூட தாளாளர் தங்கவேல், முதல்வர் கலைசெல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஆசிரியை கல்பனா வரவேற்று பேசினார். முடிவில் மழலையர் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வி நன்றி கூறினார்.
ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக்கூட தலைவர் குப்புசாமி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பொருளாளர் அண்ணமார் சின்னு என்கிற பெரியசாமி முன்னிலை வகித்தார். முதல்வர் நதியா வரவேற்று பேசினார். இதில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் தாளாளர் கே.செல்வராஜ், துணைத்தலைவர் நால்ரோடு சுப்பு, இணைச்செயலாளர்கள் ஆர்.குணசேகரன், எம்.நாச்சிமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.துரைசாமி, ஆர்.செல்வராஜ், ஆர்.எம்.தெய்வசிகாமணி, எம்.சின்னசாமி, ஆர்.தியாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் நல்லப்பன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story