ஆம்பூர் அருகே ‘டிக் டாக்’கில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு


ஆம்பூர் அருகே ‘டிக் டாக்’கில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Jan 2019 4:00 AM IST (Updated: 27 Jan 2019 7:44 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே ‘டிக்டாக்’கில் ஒரு சமுதாயத்தை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆம்பூர், 

ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிகம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ராஜ் (வயது 20), அந்த பகுதியில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் ‘டிக் டாக்’ எனப்படும் சமூக வலைதளத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டார்.

இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே சமுதாயத்தை ஆபாசமாக பேசியவர் மீது கடுமையான சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென 100–க்கும் மேற்பட்டோர் உமராபாத் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள், வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்தனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஆதரவாகவும், அவரை விடுவிக்கக்கோரியும் உமராபாத் போலீசில் நிலையத்திற்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.


Next Story