திருமணம் செய்வதாக கூறி சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சின்னகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் மகேஸ்வரி(வயது 19). இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அதே கல்லூரியில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா மேலவிசலூர் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் தமிழரசன் (22) என்பவரும் படித்துள்ளார். ஒரே கல்லூரியில் இருவரும் படித்து வந்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டனர். இதனையடுத்து இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். அப்போது தமிழரசன், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மகேஸ்வரியுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். அதன்பின்னர் மகேஸ்வரியை சந்திப்பதை தமிழரசன் தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் பயந்துபோன மகேஸ்வரி தமிழரசனை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியான பதில் சொல்லாமல் சமாளித்து வந்துள்ளார்.
இதுகுறித்து மகேஸ்வரி நன்னிலம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், திருமண ஆசை காட்டி தன்னை தமிழரசன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தற்போது திருமணத்திற்கு மறுத்து விட்டதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Tags :
Next Story