நன்னிலத்தில் 4,400 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்


நன்னிலத்தில் 4,400 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்
x
தினத்தந்தி 27 Jan 2019 10:45 PM GMT (Updated: 27 Jan 2019 6:53 PM GMT)

நன்னிலத்தில் 4,400 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நன்னிலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு நாகை கே.கோபால் எம்.பி., நன்னிலம் ஒன்றிய செயலாளர்கள் ராம.குணசேகரன் (தெற்கு), சி.பி.ஜி.அன்பு (வடக்கு), முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு நன்னிலம் பேரூராட்சிக்குட்பட்ட 4,400 பேருக்கு 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உங்கள் பகுதியில் உங்களுக்கு தேவையான அனைத்தும் பூர்த்தி செய்துள்ளேன். இதற்கு காரணம் நீங்கள் என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தது தான். நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 93 ஆயிரம் குடும்பங்களுக்கும் இந்த உதவிகள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், திருவாரூர் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள், மாவட்ட நிர்வாகிகள் மதிவாணன், ரயில்பாஸ்கர், அருண்நடராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ், நன்னிலம் நகர செயலாளர் பக்கிரிசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ராணிசுவாதிகோபால், ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன், ஒன்றிய பாசறை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் ஊராட்சி கழக செயலாளர்கள், கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story