ஸ்ரீபெரும்புதூரில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு


ஸ்ரீபெரும்புதூரில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு
x
தினத்தந்தி 28 Jan 2019 3:00 AM IST (Updated: 28 Jan 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூரில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருடப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பாஞ்சாலம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அருள்பாண்டி (வயது 26). இவர் ஸ்ரீபெரும்புதூர் பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். அருள்பாண்டி வழக்கம் போல நேற்றுமுன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று காலை கடையை திறக்க சென்ற அருள்பாண்டி கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 28 செல்போன்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அருள்பாண்டி ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து கடைக்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story