சக்கர நாற்காலி பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்


சக்கர நாற்காலி பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 28 Jan 2019 4:00 AM IST (Updated: 28 Jan 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தசைச்சிதைவு நோய் அல்லது பக்கவாதத்தால் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட 2 கால்களும், 2 கைகளும் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் வழங்கப்படவுள்ளது.

அரியலூர்,

தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தசைச்சிதைவு நோய் அல்லது பக்கவாதத்தால் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட 2 கால்களும், 2 கைகளும் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் (பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள்) வழங்கப்படவுள்ளது. அதனை பெற ஆண் மாற்றுத்திறனாளிகள் 60 வயதிற்கு மிகாமலும், பெண் மாற்றுத்திறனாளிகள் 55 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மத்திய- மாநில அரசுகளில் பணிபுரியும் மேற்கண்ட வகையை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கப்படும். எனவே, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, பணிபுரிபவர்களாக இருந்தால் பணிச்சான்று ஆகியவற்றுடன் அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ நாளை மறுநாளுக்குள் (புதன்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்ணான 04329-228840-ஐ தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story