ஆலங்காயம் அருகே அரசு பஸ் - கரும்பு லாரி மோதல்; இடிபாடுகளுக்குள் சிக்கிய டிரைவர் மீட்பு பயணிகள் 10 பேர் காயம்


ஆலங்காயம் அருகே அரசு பஸ் - கரும்பு லாரி மோதல்; இடிபாடுகளுக்குள் சிக்கிய டிரைவர் மீட்பு பயணிகள் 10 பேர் காயம்
x
தினத்தந்தி 29 Jan 2019 3:45 AM IST (Updated: 28 Jan 2019 10:55 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்காயம் அருகே அரசு பஸ் - கரும்பு லாரி மோதியது. இதில் பயணிகள் 10 பேர் காயம் அடைந்தனர்.

வாணியம்பாடி, 

ஆலங்காயம் - காவலூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி ஆர்.எம்.எஸ்.புதூர் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் தினகரன் (வயது 40) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார். அவரை சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்து வாகனங்களை அப்புறப்படுத்த காலதாமதம் ஆனால் அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு வாகனங்கள் அப்புறப்படுத்திய பின் போக்குவரத்து தொடங்கியது.

Next Story