வேப்பனப்பள்ளி பகுதிகளில் செண்டுமல்லி விலை கடும் வீழ்ச்சி விவசாயிகள் கவலை
வேப்பனப்பள்ளி பகுதிகளில் செண்டுமல்லி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்ற வட்டார பகுதிகளில் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இங்கு பூக்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பூக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செண்டுமல்லி பூக்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து தற்போது செண்டுமல்லி விலை குறைந்து கடும் விழ்ச்சியடைந்துள்ளது. பொங்கலுக்கு ரூ.40 முதல் ரூ.80 வரை விற்கப்பட்ட செண்டுமல்லி தற்போது கிலோ ரூ.5 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் விவசாயிகள் செண்டுமல்லியை விற்க முடியமால் சாலை ஓரங்களில் கொட்டி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடும் பனி மற்றும் அதிக விளைச்சல் காரணமாக செண்டுமல்லி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் இம்முறை செண்டுமல்லி விளைச்சலில் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளோம் என கவலையுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story