வேலைவாய்ப்பு செய்திகள் : ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணிகள்


வேலைவாய்ப்பு செய்திகள் : ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணிகள்
x
தினத்தந்தி 29 Jan 2019 5:07 PM IST (Updated: 29 Jan 2019 5:07 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி மற்றும் முதுநிலை நிர்வாக அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

சிறப்பு அதிகாரி (ஆபீசர்- ரெகுலர்) பணிக்கு 16 பேரும், சிறப்பு அதிகாரி (ஆபீசர் - காண்டிராக்ட்) பணிக்கு 11 பேரும், மற்றொரு அறிவிப்பின்படி சிறப்பு அதிகாரி (ரெகுலர்-காண்டிராக்ட்) பணிக்கு 31 பேரும், முதுநிலை நிர்வாக அதிகாரி (கிரெடிட் ரிவியூ) பணிக்கு 15 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பி.இ., பி.டெக் படித்தவர்கள் 11 பணியிடங்கள் உள்ள சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். எம்.பி.ஏ, படிப்புடன் முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் ரெகுலர் பிரிவு பணிக்கும், முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் சி.ஏ. படித்தவர்கள் (ரெகுலர்-காண்டிராக்ட்) பணி மற்றும் முதுநிலை நிர்வாக அதிகாரி பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

31 பணியிடங்கள் உள்ள பிரிவுக்கு 31-1-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற பணி களுக்கு பிப்ரவரி 11-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இவை பற்றிய விரிவான விவரங்களை www.sbi.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story