ஆசிரியர்களின் போராட்டத்தை தூண்டியதாக புகார்: திருவெறும்பூர் வட்டார கல்வி பெண் அதிகாரி பணியிடை நீக்கம்
ஆசிரியர்களின் போராட்டத்தை தூண்டியதாக திருவெறும்பூர் வட்டார கல்வி பெண் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சி,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆசிரியர்கள் நேற்று முன்தினம் வரை பெருமளவு பங்கேற்றிருந்தனர். இந்த நிலையில் ஆசிரியர்களை உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வி துறை எச்சரித்தது.
இதைதொடர்ந்து நேற்று காலை ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பணிக்கு திரும்பினர். திருச்சி மாவட்டத்திலும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றிருந்த ஆசிரியர்கள் பலர் பள்ளிக்கு சென்றனர். ஒரு சில இடங்களில் மட்டும் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் இருந்தனர்.
இந்தநிலையில் திருவெறும்பூர் வட்டார கல்வி அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர் பணிக்கு திரும்பாமல் இருந்ததாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருட்டிணனுக்கு தகவல் வந்தது. மேலும் அந்த வட்டார கல்வி அதிகாரியான ரெஜி பெஞ்சமின், ஆசிரியர்களின் போராட்டத்தை தூண்டிவிடுவதாகவும் புகார் வந்தது. இதைதொடர்ந்து திருவெறும்பூர் வட்டார கல்வி அதிகாரி ரெஜி பெஞ்சமினை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருட்டிணன் பணியிடை நீக்கம் செய்து நேற்று மதியம் உத்தரவிட்டார்.
இதுகுறித்து ராமகிருட்டிணனிடம் கேட்டபோது, “திருவெறும்பூர் வட்டார கல்வி அதிகாரி ரெஜி பெஞ்சமின், ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார். மேலும் போராட்டத்தை தூண்டி விட்டதாக தகவல் வந்தது. இதனால் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்” என்றார்.
ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை தூண்டிய வட்டார கல்வி பெண் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டது திருச்சி மாவட்ட கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story