கேரளாவுக்கு கடத்தப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் லாரியுடன் பறிமுதல் டிரைவர் கைது
சத்தீஷ்கர் மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்பிலான எரிசாராயத்தை நாமக்கல்லில் போலீசார் டேங்கர் லாரியுடன் பறிமுதல் செய்தனர். அந்த லாரியின் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்,
வட மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு தமிழகம் வழியாக எரிசாராயத்தை கடத்தி செல்ல இருப்பதாக சென்னை மதுவிலக்கு அமலாக்கபிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் ராஜேஸ்தாஸூக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கபிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ், ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று காலையில் நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த டேங்கர் லாரி ஒன்றை நிறுத்தி, ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது அதில் போலி ரசீதுகள் இருப்பதை கண்ட போலீசார், டிரைவர் காஞ்சிரம் மாவட்டம் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த தனதேவன் (வயது 55) என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த லாரியில் சுமார் 25 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் சத்தீஷ்கர் மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதற்காக லாரியில் பிரத்யேக அறைகள் மற்றும் அமைப்புகள் ஏற்படுத்தி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ரூ.75 லட்சம் மதிப்பிலான எரிசாரத்தை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் தனதேவன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரியுடன் சேர்த்து பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தை ஆய்வு செய்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, சேலம் மண்டல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் ஆகியோர் தனிப்படை போலீசாரை பாராட்டினர்.
இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story