மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்பட்டன 99 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்
திருச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்பட்டன. 99 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினார்கள்.
திருச்சி,
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்டத்தில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந்தேதியில் இருந்து வேலை நிறுத்தம் செய்து வந்தனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும் மூடப்பட்டன. ஆசிரியர்களின் போராட்டத்தினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. சாலை மறியல் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஆசிரியர்கள் போராட்டம் 7 நாட்களுக்கும் மேலாக நீடித்த நிலையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் மூடப்பட்ட பள்ளிகளை திறந்து பயிற்சி ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணி வழங்க கோரி நேற்று மாலை வரை சுமார் 7 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பம் செய்து இருந்தனர். இந்த விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஐகோர்ட்டு வழங்கிய அறிவுரையின் அடிப்படையில் ஆசிரியர்கள் நேற்று பணிக்கு திரும்பினார்கள். இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் நேற்று தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை பொறுத்தவரை 99.78 சதவீதம் ஆசிரியர்களும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 99.70 சதவீதம் ஆசிரியர்களும் பணிக்கு திரும்பி விட்டதாகவும் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி பணிக்கு வராதவர்களாக 24 ஆசிரியர்கள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளதாகவும் (காலி பணியிடம்) மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related Tags :
Next Story