பூந்தமல்லி அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை


பூந்தமல்லி அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 31 Jan 2019 3:15 AM IST (Updated: 31 Jan 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி அருகே மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த அகரமேல் பகுதியில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காந்தி நினைவு தினம் என்பதால் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை அந்த இடத்தின் உரிமையாளர் அந்த வழியாக சென்றபோது மதுக்கடையின் இரும்புகதவு திறந்து கிடந்தது. அருகில் சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கும், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் சங்கரனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த மதுக்கடையை சோதனை செய்தனர்.

இதில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடைக்குள் லாக்கரில் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து நசரத்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story