சேந்தமங்கலம் அருகே, வனப்பகுதியில் மூலிகை கிழங்கை வெட்டிய 4 பேருக்கு அபராதம்


சேந்தமங்கலம் அருகே, வனப்பகுதியில் மூலிகை கிழங்கை வெட்டிய 4 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 31 Jan 2019 3:30 AM IST (Updated: 31 Jan 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே வனப்பகுதியில் மூலிகை கிழங்கை வெட்டிய 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சேந்தமங்கலம்,

சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி - கருமலைக்கரடு பகுதியில் விளையும் அரியவகை மூலிகை ரக மாவலி கிழங்கை சிலர் வெட்டி எடுத்து கடத்துவதாக நாமக்கல் மாவட்ட வன அலுவலர் காஞ்சனாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், நாமக்கல் வனசரகர் ரவிச்சந்திரன் தலைமையில், வனவர் தமிழ்வேந்தன் மற்றும் வனக்காப்பாளர்கள் சுகுமாறன், பாலசுப்பிரமணியம், அன்பரசு, மோகன்குமார், ரமேஷ் ஆகியோர் அப்பகுதியில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் இருளர் காலனியை சேர்ந்த பைரவன் (வயது 60), தங்கவேல் (57), வேடியப்பன் (47), செல்லப்பன் (49) ஆகிய 4 பேர் கருமலைக்கரடு வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் மாவலி கிழங்கை வெட்டி எடுத்துக்கொண்டு இருந்தனர்.

அவர்களை கையும், களவுமாக பிடித்த வனத்துறையினர் அவர்கள் 4 பேருக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Next Story