நாமக்கல்லில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்


நாமக்கல்லில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 31 Jan 2019 3:30 AM IST (Updated: 31 Jan 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நேற்று கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நாமக்கல், 

நாமக்கல் தலைமை அரசு ஆஸ்பத்திரியில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இணை இயக்குநர் (நலப்பணிகள்) உஷா முன்னிலை வகித்தார்.

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கிய இந்த ஊர்வலம் மணிக்கூண்டு, திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் சாலை, மோகனூர் சாலை வழியாக மீண்டும் அரசு ஆஸ்பத்திரியை வந்தடைந்தது. இதில் கலந்துகொண்ட செவிலியர் கல்லூரி மாணவிகள் தொழுநோய் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

இதில் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் செல்வக்குமார், துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (காசநோய்) கணபதி, துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) ஜெயந்தினி, நலக்கல்வியாளர் சொக்கலிங்கம், இந்திய மருத்துவர் சங்க நாமக்கல் கிளை தலைவர் டாக்டர் ரெங்கநாதன் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியான உணர்ச்சியற்ற தேமல், படை போன்ற தோல் நோய் உள்ளவர்களோ அல்லது தொழுநோயினால் உடல் குறைபாடு உள்ளவர்களோ எனது குடும்பத்திலோ, வீட்டின் அருகிலோ இருந்தால் உடன் அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை எடுக்க ஏற்பாடு செய்வேன் என கலெக்டரின் நேர்முக உதவியாளர் வாசிக்க, அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர்.

Next Story