ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத கால நிலுவை தொகையினை வழங்க வேண்டும்.
3 ஆயிரத்து 500 தொடக்க பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடிவினையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில், கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது. இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 9-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அரசு பொதுவளாகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கோஷம்போட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் ஓரளவிற்கு இயங்கின. பெருவாரியான தொடக்கப்பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து புதுக்கோட்டைக்கு பள்ளி கல்வி துறையின் இணை இயக்குனர்கள் அமுதவள்ளி, பொன்குமார் ஆகியோர் வந்தனர். நேற்று காலை முதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். தொடக்கபள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை என்றால் ஆசிரியர் பயிற்சி கல்லுாரி மாணவர்களை வைத்து பள்ளியை இயக்க அறிவுறுத்தி வந்தார்.

Related Tags :
Next Story